Breaking News

வாழ்வாதாரத்தை அளித்த முதல்வருக்கு மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்த மலைவாழ் மக்கள்

ஈரோடு, ஏப்.10-

ஈரோடு மாவட்டம் வருமானம் இன்றி தவித்த மலைவாழ் மக்களுக்கு வாழ்வாதாரத்தை பெருக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களின் மூலம்   வாழ்க்கைக்கு, பெரும் நம்பிக்கையை கொடுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் அப்பகுதியில் கிடைக்கும் புற்களை கொண்டு துடைப்பம் தயாரித்து விற்பனை செய்யும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற நாளிலிருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்காக வழங்கப்படும் நலத்திட்டங்களை எவ்வித கால தாமதமின்றி வழங்கிட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்கள். 

அந்த வகையில், ஈரோடு மாவட்டம், தாளவாடி உள்ளிட்ட மலைவாழ்  மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அப்பகுதியிலுள்ள வளங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மகளிர் திட்ட இணை இயக்குநருக்கு உத்தரவிட்டது. 

அதனைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள், துடைப்பம் தயார் செய்ய பயன்படுத்தப்படும் வனப்பகுதியில் விளையும் ஒரு வகை நறுமணப்புல்லை பறித்து, சூரிய ஒளியில் நன்கு உலர்த்தி ஒரு கிலோ தலா ரூ.20/-வீதம் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்வதையும், இடைத்தரகர்கள் அதனை சத்தி, பவானிசாகர் ஆகிய பகுதிகளில் ஒரு கிலோ ரூ.60/- வரை விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டது.

அதனடிப்படையில், ராமரணை மகளிர் சுய உதவிக்குழுவின் 17 உறுப்பினர்களுக்கு, ஈரோட்டிலிருந்து நன்கு துடைப்பம் தயாரிக்கும் நபர்களைக் கொண்டு தொடர்ந்து 3 நாட்களுக்கு துடைப்பம் தயாரிக்க உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு, அப்பயிற்சிகளின் மூலம் ராமரணை பழங்குடியின மக்கள் மூன்று வகையான துடைப்பங்களை நாளொன்றுக்கு 15 முதல் 20 வரை தயார் செய்து ரூ.750/- முதல் ரூ.1000/- வரையிலும் விற்பனை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். 

இத்தொழிலுக்காக மகளிர் திட்டத்தின் மூலம் ரூ.75,000/- நிதியுதவியும் இம்மகளிர் சுய உதவிக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நாளது வரை தலா ரூ.40/- மதிப்பில் 1,344 துடைப்பங்களும், தலா ரூ.45/- மதிப்பில் 378 துடைப்பங்களும், தலா ரூ.50/- மதிப்பில் 935 துடைப்பங்களும் என மொத்தம் 2,657 துடைப்பங்கள் ரூ.1,17,520/- மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

நான் ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டாரம் தலமலை  ஊராட்சிக்குட்பட்ட ராமரனை மலை கிராமத்தில் வசிக்கும் கீதா, க/பெ. ரமேஷ் அவர்கள் தெரிவித்ததாவது,

எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. நான் ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டாரம் தலமலை  ஊராட்சிக்குட்பட்ட ராமரனை என்கிற மலை கிராமத்தில் வசித்து வருகிறேன்.எங்கள் ஊரில் 15 பேர் சேர்ந்து ராமரனை மகளிர் சுய உதவி குழு 2016 -ல் ஆரம்பித்தோம். எங்கள் ஊரில் கூலி வேலை கிடைப்பது மிக அரிது. எனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. வனத்திலிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தேன். பருவகாலங்களில் சீமார் புல்லினை  நாளொன்றுக்கு 10 கிலோ எடுத்து வந்து அதனை  கிலோ ரூ.15 முதல் ரூ.20 வீதம் விற்பனை செய்தேன். இதன் மூலம் ரூ.150 முதல் ரூ.200 ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்ட முடிந்தது. 

மாவட்ட ஆட்சியர் அவர்கள் கடந்த 24-07-2021 நாளன்று எங்கள் கிராமத்தினை பார்வையிட வந்திருந்தார். அவரிடம் எங்கள் வாழ்வாதாரத்தை பெருக்க எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தோம். பிறகு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் - ஈரோடு மகளிர் திட்டம் மூலமாக சீமார் புல்லினைக் கொண்டு துடைப்பம் தயாரிக்க இரண்டு நாள் பயிற்சி வழங்கபட்டது.  சீமார் செய்யக் கற்றுக் கொண்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சீமார் செய்ய ஆரம்பித்தேன். தற்போது ஒரு கிலோ சீமார் புல்லில் 2 துடைப்பம் தயாரித்து ஒரு கிலோவிற்கு ரூபாய் 80 வீதம் வருமானம் கிடைக்கிறது.

நாளொன்றுக்கு 15 முதல் 20 துடைப்பங்கள் கட்டி அதன்மூலம் ரூபாய் ரூ.600 முதல் ரூ.800 ரூபாய் சம்பாதிக்கிறேன். இதனால் எனது குடும்ப வருமானம் பெருகியுள்ளது. எனக்கு வழிகாட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நான் ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டாரம் தலமலை  ஊராட்சிக்குட்பட்ட ராமரனை மலை கிராமத்தில் வசிக்கும்அமுதா, க/பெ. முருகேஷ் அவர்கள் தெரிவித்ததாவது,

எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.  நான் ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டாரம் தலமலை  ஊராட்சிக்குட்பட்ட ராமரனை என்கிற மலை கிராமத்தில் வசித்து வருகிறேன்.  2016-ம் ஆண்டு எங்கள் ஊரில் 15 பேர் சேர்ந்து ராமரனை மகளிர் சுய உதவி குழு ஆரம்பித்தோம். வனப்பகுதியிலிருந்து  கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வந்தோம்.  

எனது குடும்பத்தை நடத்த, பருவகாலங்களில் சீமார் புல்லினை  நாளொன்றுக்கு 10 கிலோ எடுத்துவந்து அதனை  கிலோ ரூ.15.00 முதல் ரூ.20.00 வீதம் விற்பனை செய்தேன். இதன் மூலம் 150 முதல் 200 ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்ட முடிந்தது. எனக்கு மேற்கொண்டு எந்த வருமானமும்  இல்லததால் ஊரை விட்டு வேறு ஊருக்கு இடம்பெயர்ந்தேன். 

மாவட்ட ஆட்சியர் அவர்கள் கடந்த 24-07-2021 அன்று எங்கள் கிராமத்தினை  பார்வையிட வந்திருந்தார். அவரிடம் எங்கள்  வாழ்வாதாரத்தை பெருக்க எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தோம். பிறகு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் - ஈரோடு மகளிர் திட்டம் மூலமாக சீமார் புல்லினைக் கொண்டு துடைப்பம் கட்ட இரண்டு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.  

சீமார் செய்யக் கற்றுக் கொண்ட பிறகு குழுவில் உள்ள நபர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சீமார் செய்ய ஆரம்பித்தார்கள். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள். பிறகு நானும் எனது கிராமத்திற்கு வந்து துடைப்பம் கட்ட கற்றுக்கொண்டேன். தற்போது ஒரு கிலோ சீமார் புல்லில் 2 துடைப்பம் தயாரித்து ஒரு கிலோவிற்கு ரூபாய் 80 வீதம் வருமானம் கிடைக்கிறது.நாளொன்றுக்கு 15 முதல் 20 துடைப்பங்கள் கட்டி அதன்மூலம் ரூபாய் 600 முதல் 800 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். இதனால் எனது குடும்ப வருமானம் பெருகியுள்ளது. 

வருமானம் இன்றி தவித்த எங்களை போன்ற மலைவாழ் மக்களுக்கு வாழ்வாதாரத்தை பெருக்கி, பல்வேறு திட்டங்களின் மூலம் எங்கள் வாழ்க்கைக்கு, பெரும் நம்பிக்கையை கொடுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொகுப்பு

க.செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு மாவட்டம்.


No comments

Thank you for your comments