அதிக பாரம் ஏற்றி வந்ந வாகனங்களுக்கு அபராதம்
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் இன்று 08.04.22 திருவள்ளூர் நகர பகுதியில் சவுடு மன் ஏற்றப்பட்டு சரக்கு வாகனங்கள் மூடப்படாமல் மற்றும் அதிக பாரம் ஏற்றுவதாகவும் வரும் புகார்களின் அடிப்படையில், சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் அவர்களின் உத்தரவின் பேரில் வட்டார போக்குவத்து அலுவலர் சு.மோகன் அவர்களின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கா.பன்னீர் செல்வம், கோ.மோகன் மற்றும் போககுவரத்து காவல் துணை ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் நடத்திய சோதனையில் சுமார் 40 சரக்கு லாரிகளை ஆய்வு செய்து அதில் அதிக சுமை, அனுமதிக்குப் புரம்பாக சரக்கு ஏற்றும் பகுதியை உருமாற்றம் செய்யப்பட்ட மற்றும் சரக்கு ஏற்றும் பின் பகுதியில் தார் பாலின் கொண்டு மூடப்படாத சரக்கு டிப்பர் லாரிகள் ஆறு வாகனங்களை சிறை பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டது.
அதன் பின் வாகன உரிமையாளர்கள் நேரில் வந்து சரக்கு ஏற்றும் பகுதியில் அதிகப்படியாக வைத்துள்ள ரீப்பரை உடனடியாக எடுத்து விடுவதாகவும், பின் பகுதியில் தார் பாலின் கொண்டு மூடி வாகனத்தை இயக்குவதகவும் உறுதி அளித்தப்பின் வட்டார போககுவரத்து அலுவலரின் உத்தரவுப்படி ரூபாய் 2,35,000/- அபராதம் உடன் வசூல் செய்யப்பட்டு வாகனங்கள் விடுவிக்கப்பட்டது.
மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர் கா. பன்னீர் செல்வம் கூறும்போது மண் மற்றும் மணல் ஏற்றும் சரக்கு வாகனங்கள் கண்டிப்பாக தார் பாலின் கொண்டு முழுவதுமாக மூடியிருக்க வேண்டும், அப்பொழுதுதான் பின்னே வரும் இரு சக்கர வாகனம், பாதசாரிகள் மற்றும் இதர வாகனங்களில் வருவோர் கண்களில் மாசு படாமல் செல்ல முடியும் விபத்துக்களை தடுக்க முடியும் என்றும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
No comments
Thank you for your comments