மாபெரும் தொழிற்பழகுநர் பயிற்சி வேலைவாய்ப்பு முகாம்
வேலூர் :
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வேலூர்-10, மற்றும் வேலூர் நிர்வாகங்களின் சார்பில் RDSDEவுடன் இணைந்து மாபெரும் தொழிற்பழகுனர் பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21.04.2022 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், பெங்களூர்-சென்னை மெயின்ரோடு அப்துல்லாபுரம் வேலூர்-10 நடைபெறவுள்ளது.
மேற்படி தொழிற்பழகுநர் பயறிசி வேலைவாய்ப்பு முகாமில் கீழ்கண்ட கல்வித்தகுதி உடையவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இதில் பல்வேறு அரசு/தனியார் தொழில் நிறுவனங்கள் பங்குபெற்று தொழிற்பழகுநர் பயிற்சி வேலைவாய்ப்பு வழங்க உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
1. ஐ.டி.ஐ - தேர்ச்சி / தோல்வி
2. எட்டாம் வகுப்பு -தேர்ச்சி / தோல்வி
3. எஸ்.எஸ்.எல்.சி / 12-ம் வகுப்பு - தேர்ச்சி / தோல்வி
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்
No comments
Thank you for your comments