Breaking News

ஈரோடு மாவட்ட தொழில் மையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, ஏப்.19-

ஈரோடு மாவட்ட தொழில் மையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பதவி பொதுப் போட்டி முன்னுரிமையற்றவர் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் 30.04.2022 அன்று பிற்பகல் 05.45 மணிவரை வரவேற்கப்படுகின்றன. 


கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை தமிழ்நாடு அரசு இரண்டாண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளதன்படி 01.04.2022 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும், பிற்பட்ட/மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 34 வயதுக்குள்ளும், தாழ்த்தப்பட்ட / பழங்குடியினருக்கு 37 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். அரசு விதிகளின் படி, உச்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. மேலும் கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் மற்றும் ஓட்டுநர் பணியில் குறைந்தது 2 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

மேற்காணும் தகுதியுடையவர்கள்; தங்களின் விண்ணப்பத்தினை வெள்ளைத்தாளில் எழுதி பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஒட்டி பொதுமேலாளர், மாவட்டதொழில் மையம், சென்னிமலை ரோடு, ஈரோடு - 638 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி, சாதி மற்றும் வயதுக்கான சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் மற்றும் முன்அனுபவ சான்றிதழ்களின் ஒளி நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும். தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்களும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள இயலாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments