Breaking News

ஆம்வே நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.757.77 கோடியே மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

திண்டுக்கல், ஏப்.19-

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆம்வே நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம், கட்டடம், வங்கியிருப்பு உள்ளிட்ட 757 கோடியே 77 இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஆம்வே மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்கில் முதலீட்டாளர்களின் பணத்தை முறைகேடு செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இது தொடர்பான வழக்கில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆம்வே தொழிற்சாலைக் கட்டடம், நிலம், எந்திரங்கள், வாகனங்கள், வங்கிக் கணக்குகள், வைப்பு நிதி ஆகியவற்றை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இதில் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மதிப்பு 411 கோடியே 83 இலட்ச ரூபாய் என்றும், 36 வங்கிக் கணக்குகளில் இருந்த தொகை 345 கோடியே 94 இலட்ச ரூபாய் என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.


No comments

Thank you for your comments