விவசாயிகளுக்கு மின் இணைப்பு சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் அன்பரசன்...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஓராண்டில் 1,00,000 விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் கலந்துரையாடிய நிகழ்ச்சியின் தொடர் நிகழ்வாக, காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டை, மீனாட்சி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் விவசாயிகளுக்கு மின் இணைப்பு சான்றிதழ்களை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஓராண்டில் 1,00,000 விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் கலந்துரையாடிய நிகழ்ச்சியின் தொடர் நிகழ்வாக, காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டை, மீனாட்சி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 16.04.2022 அன்று மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் விவசாயிகளுக்கு மின் இணைப்பு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் 1,00,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் ஆணை வழங்குதல் துவக்க விழா கடந்த 23.09.2021 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்ட 6 மாதங்களிலேயே ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருப்பது பெருமை மிக்கதாகும்.
இத்திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காஞ்சிபுரம் வட்டத்திற்கு 2290 விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இலக்கிற்கு அதிகமாக 2719 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில் மொத்தம் 4 கோட்டங்கள் உள்ளது. அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 640 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான திட்ட மதிப்பீடு ரூ.475.83 இலட்சம் ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய விவசாய மின் இணைப்புகள் மூலம் 890.65 ஏக்கர் நிலம் விவசாயத்திற்கு உகந்த நிலமாக மாற்றப்பட்டுள்ளது.
மழையை நம்பி விவசாயம் செய்கின்ற நிலைமை மாறி இன்று மூன்று பாகம் விவசாயம் செய்திடும் நிலையில் உணவு பஞ்சம் தீரும். ஒருங்கிணைந்த திட்டத்திற்கு, ஊராட்சிகளுக்கு, ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 9.26 இலட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை, 16,15,914 விவசாயிகளுக்கு ரூ.9779 கோடி மதிப்பீட்டில் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13512 விவசாயிகளுக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுடைய வாழ்வு வளம் பெற பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் மூலம் விவசாய பெருமக்கள் பயனடைந்து வாழ்க்கையில் மேம்பட வேண்டும். இந்நிகழ்ச்சியை சிறப்பித்த, விவசாய பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.சுந்தர் (உத்திரமேரூர்), திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திருமதி.நித்யா சுகுமார், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் திரு.குமரகுருநாதன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், காஞ்சிபுரம் வட்ட தமிழ்நாடு மின் பகிர்மான கழக அலுவலர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments