உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
விருத்தாசலம்
கோடைக்காலம் தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது இதனால் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தலை மாவட்ட தலைவர் முத்துக்குமார் திறந்து வைத்தார்.
இதில் பொதுமக்களுக்கு தர்பூசணி, வாழை பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கினார்
இன்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜ்கமல் , மாவட்ட துணை செயலாளர்கள் வடிவேல் முருகன், செல்வமணி முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் நகர நிர்வாகிகள் அஜய், பாலாஜி, மணிகண்டன், பப்ளு, மணிகண்டன் ஒன்றிய நிர்வாகி பிரவின்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments