Breaking News

அரசு பேருந்து நடத்துனர் தலைக்கு ஏறிய போதை... பள்ளி மாணவணுக்கு கும்மாங்குத்து...

விருத்தாசலத்தில் அரசு பேருந்து நடத்துனர் தலைக்கு ஏறிய போதை பள்ளி மாணவணுக்கு கும்மாங்குத்து... நடவடிக்கை எடுக்க காவல் துறையினரிடம் மாணவர்கள் குமுறல்...

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து பெரியார் நகர் வழியாக குப்பநத்தம் வரை செல்லும் அரசு பேருந்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு சென்றபோது ஹரி என்ற மாணவனை நடத்துனர் படியிலிருந்து மேலே ஏறி என்று கூறியதாகவும் மாணவனும் சரி என்று கூறியுள்ளார்.


ஆனால் நடத்துனர் குடிபோதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது இதனால் நடத்துனர் மற்றும் மாணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு நடத்துனர் மாணவனின் சட்டியை பிடித்து  கும்மாங்குத்து கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது

இதில் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் பேருந்தை காவல் நிலையத்தில் நிறுத்தும்படி கூறியதால் பேருந்தை விருத்தாசலம் காவல் நிலையத்தில் நிறுத்தி உதவி  ஆய்வாளரிடம் மாணவனை கும்மாங்குத்து கொடுத்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.

இதுகுறித்து உதவி காவல் ஆய்வாளர் தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் மீண்டும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

No comments

Thank you for your comments