Breaking News

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக மக்கள் குறை தீர்வு கூட்டம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம்  தமிழ்நாடு மின்சார வாரியம் காஞ்சி வடக்கு கோட்டத்தின் மக்கள் குறை தீர்வு கூட்டம்  ரயில்வே சாலையில் அமைந்துள்ள  செயற் பொறியாளர்   அலுவலத்தில் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.



காஞ்சிபுரம் மாவட்டம்  தமிழ்நாடு மின்சார வாரியம் காஞ்சி வடக்கு கோட்டம் மூலம் மக்கள் குறை தீர்வு கூட்டம்  ரயில்வே சாலையில் அமைந்துள்ள  செயற் பொறியாளர்   அலுவலத்தில் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றன. 

மக்கள் குறைதீர் கூட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மாதந்தோறும் மூன்றாவது வாரம் வியாழக்கிழமை நடைபெற்று வந்த நிலையில் மாபெரும் கோரானா தோற்றால் அவை தற்காலிகமாக கைவிடப்பட்டு இருந்தன. 

அவற்றை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டு மக்களின் மின்சார இணைப்பு தாமதமாகவும்,  புதிய மின் இணைப்பு பெற வேண்டி பொதுமக்கள் அளிக்கும் மனுவிற்கு அனைத்து கோட்டை பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் அனைவரும் ஒரே இடத்தில் மக்களை சந்தித்து மக்கள் கூறும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அனைவரும் மின் இணைப்பு பெற்ற மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக கொண்டுவர இக்கூட்டம் பேருதவியாக இருக்கும் என்றும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் தங்கள் பகுதியில் ஏற்படும் மின் தடை, மின் பற்றாக்குறை, புதிய மின் தடம் போன்ற அனைத்து விதமான குறைகளும் கேட்டறிந்து உடனடி தீர்வு காண்பதாக காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகம் தெரிவித்தார். இவற்றால் பொதுமக்கள் அனைவரும் மின் இணைப்பு பெறுவதில் சிரமமில்லாமல் உடனடி மின்சாரம் வழங்கப்படுவதாக பொதுமக்களிடம் உறுதியளித்து வருகின்றனர். 

மேலும் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரம் வியாழக்கிழமை அன்று இக்கூட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று மேற்பார்வை பொறியாளர் சண்முகம் தெரிவித்தார். 

பின்பு விவசாய நிலங்களுக்கு வழங்கப்படும் புதிய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தி வழங்கப்படுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை கேட்டதற்கு தமிழக அரசு வழங்கும் மின்சார அளவு சரியான முறையில் பயன்படுத்துகின்றனவா என்ற அடிப்படையில் விவசாயத்திற்காக ஒதுக்கப்படும் மின்சாரம் சரியான அளவை கணக்கிடவே மீட்டர் பொருத்தப்படுகிறது. இவை எக்காரணம் கொண்டும் யூனிட்டுக்கு பணம் வசூலிக்க இல்லை என மேற்பார்வை பொறியாளர் சண்முகம் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு செயற்பொறியாளர் சரவண தங்கம், காஞ்சிபுரம் நகர உதவி செயற்பொறியாளர் இளையராஜன், காஞ்சிபுரம் வடக்கு ஊரகம் உதவி செயற்பொறியாளர் ஏழுமலை, காஞ்சிபுரம் இயக்குதல் உதவி செயற்பொறியாளர்‌ இரா.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments