Breaking News

1005 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்... பதுக்கியவர் கைது...

கோவை:

1005 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, பதுக்கி வைத்திருந்தவரை  கைது செய்தனர்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர்.சைலேந்திரபாபு, உத்தரவின் பேரிலும், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர், அறிவுறுத்தலின் பேரிலும், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்ட‌ர்.முத்துசாமி  வழிகாட்டுதலின் பேரிலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மேற்பார்வையில்  கோவை மாவட்டம்    செட்டிபாளையம்  பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.  



இதனடிப்படையில்  செட்டிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சின்னகாமணன், சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ராஜேந்திர பிரசாத் சிறப்பு உதவி ஆய்வாளர்  செந்தில்குமார், மற்றும்  தனிப்படை குழுவினருடன் சம்பவ இடமான பெரிய குயிலி, வண்ணாங்காடு தோட்டம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.


அப்போது புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்த  பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மங்காராம் என்பவரது மகன் ரமேஷ்குமார் (27) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1005 கிலோ கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேற்படி நபரை வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். 

கோவை மாவட்ட காவல்துறையினரால் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் மீதான இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்  எச்சரித்துள்ளார்.

No comments

Thank you for your comments