ரூ.25 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் மேயர் மகாலட்சுமி யுவராஜ்...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தேனம்பாக்கம் பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டிடம் கட்டுவதற்கான பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தேனம்பாக்கம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கட்டித்தரக் கோரி காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கை ஏற்று உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51வது வார்டில் உள்ள தேனம்பாக்கம் பகுதியில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான கட்டிட பணியினை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் அவர்களின் அறிவுறுத்தலின்படி காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். பின்னர், விரைவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 2 மாதத்திற்குள் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாநகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், மாநகராட்சி ஆணையர் நாராயணன், மாநகராட்சி பொறியாளர் கணேசன், மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் தேனம்பாக்கம் சங்கர்,செவிலிமேடு மோகன், பூங்கொடி தசரதன், கமலகண்ணன், கார்த்தி, சங்கர், சரவணன், மலர்மண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ், தசரதன், கே.செல்வம், கிரி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments