Breaking News

இயேசு உயிர்த்தெழுந்தபெருவிழா காஞ்சிபுரம்குருசேகர c.s.i. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் வழிபாடு

 இயேசு உயிர்த்தெழுந்தபெருவிழா காஞ்சிபுரம்குருசேகர c.s.i. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் வழிபாடு உடன் கொண்டாட்டம்நடைபெற்றது.

தமிழகத்தில் அனைத்து கிறிஸ்தவர்களும் வெகு விமர்சையாக கொண்டாடும் ஒரு பண்டிகை ஈஸ்டர் பண்டிகை இயேசு கிறிஸ்து நாதர் உயிர்த்தெழுந்த நாளாக இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது காஞ்சிபுரத்தில் தென்னிந்திய திருச்சபையின் சென்னைப்பேராயம்  காஞ்சிபுரம் குருசேகரம் c.s.i. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில்  4.30மணியிலிருந்து காலை 8.30மணி வரைக்கும் இயேசு உயிர்ப்பின் பெருவிழா நற்கருணை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.



 காஞ்சிபுரம் c.s.i. கிறிஸ்து நாதர் ஆலயத்தின் சார்பில் பிரதான இறைமக்கள் உற்சாகமாக பங்குகொண்டு உயிர்த்தெழுந்த ஆண்டவரை வழிபட்டு சென்றனர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த நாளை மக்கள் ஈஸ்டர் நாளாக கொண்டாடுகின்றனர்.

ஈஸ்டர் பெருநாள் என்பது மக்களை ஆட்டிப் படைத்த பயம் இருள் அவநம்பிக்கை இயலாமை இவற்றில் இருந்து விடுதலை பெற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ள ஒரு திருநாளாக ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படும் தீய சக்திகளிலிருந்து ஆதிக்க சக்திகளை அநியாயத்தின் தாழ்ப்பாள்களை  உடைத்தெறிந்து இருளில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களின் விடியலை ஏற்படுத்துவது நம்பிக்கை இழந்து வாழ்வுக்காக போராடும் அனைத்து மக்களும் என்றும் இருப்பதாக வாக்குறுதி தந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து உலகத்தில் அனைத்து மக்களுக்கும் நிறைவாழ்வு முழுமையான வாழ்வு நம்பிக்கை வெற்றி வாழ்வு தர நம்மோடு பயணிக்க நம்முடன் வருகிறார்.

 அந்த ஆண்டவர் அனைவருக்கும் ஆசியும் தருவார் என இந்த ஈஸ்டர் பெரும் திருநாளில் மக்கள் பயபக்தியோடு கொண்டாடக்கூடிய ஒரு திருநாளாக கிறிஸ்தவர்கள் வருடம்வருடம் கடைபிடித்து வருகின்றனர் ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலி ஏற்பாடுகளை அருட்பணிதே இரக்கம் ஏற்பாடு செய்தார்.



No comments

Thank you for your comments