கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழக அரசின் மாண்புமிகு டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் முன்னோடியாக திருப்பெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய வட்டாரங்களில் 23.04.2022 அன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று (30.04.2022) காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் களியாம்பூண்டி ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் மாகரல் ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் தேவரியம்பக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (30.04.2022) துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை, இரத்தத்தில் இரும்புசத்து கண்டறிதல், இரத்தத்தில் கொழுப்பின் அளவு கண்டறிதல், கண் பரிசோதனை, பல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி சேவைகள் வழங்கப்பட்டது.
பிரசவித்த தாய்மார்களுக்கு குழந்தைகள் நல பரிசு பெட்டகம் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்ட பயனாளிகளுக்கு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டது. இச்சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இம்முகாமில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜி.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மரு.பிரியாராஜ் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.



No comments
Thank you for your comments