Breaking News

புற்றுநோய் மருத்துவமனை & ஆராய்ச்சி நிலையத்தை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ. வேலு

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் காரப்பேட்டை பேரறிஞர் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை & ஆராய்ச்சி நிலையத்தில் கட்டப்பட்டு வரும் மேன்மைமிகு மைய கட்டடப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் காரப்பேட்டை பேரறிஞர் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை & ஆராய்ச்சி நிலையத்தில் கட்டப்பட்டு வரும் மேன்மைமிகு மைய கட்டடப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் இன்று (30.04.2022) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தெரிவித்ததாவது:

காஞ்சிபுரம் காரப்பேட்டை பேரறிஞர் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் இருப்பவர்கள் இங்கே வந்து, மருத்துவம் பார்த்து, குணமடைந்து வருகின்றனர். 


இன்றைய மக்கள் தொகைக்கு ஏற்றவாறு தொற்றினுடைய வீரியத்தன்மை, அதனுடைய பரவல் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு, கூடுதலாக எல்லா வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு ஐந்நூறு படுக்ககள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட பணிகள் தொடங்கப்பட்டது. 

தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவமனையை இன்னும் விரிவுபடுத்த வேண்டும் என்ற அடிப்படையில், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், கூடுதலாக நூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, மேலும், இருநூற்று ஐம்பது படுக்கைகள் சேர்ந்து மொத்தமாக எழுநூற்றி ஐம்பது படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையாக உருவாக்கப்படவுள்ளது. இம்மருத்துவமனையில் தரை தளம் மற்றும் இரண்டு தளங்கள் (G plus 2) இருக்கிறது. மேலும் மூன்று தளங்களை கூடுதலாக (G plus 5) உருவாக்கிட ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, நேற்றைய தினம், மாண்புமிகு நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களின் மானிய கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

20 நாட்களுக்குள் அதற்குரிய அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது. மேலும் பணிகளை விரைந்து செயல்படுத்திட ஏதுவாக தலைமை பொறியாளர் திரு.விஸ்வநாதன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம்.

ஆய்வு செய்த வகையிலே, கட்டிடக் கலைகளில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி ஒரு புதிய, ஒரு பரிணாம வளர்ச்சியில் கட்டிடங்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது. குறிப்பாக தரைப்பகுதியில் போடப்படும் டைல்ஸ் மாற்றாக சுத்தப்படுத்துவதற்கு ஏதுவான கிரானைட் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று, நோயாளிகளுக்கு முழு மூன்று வேளையும் உணவு வழங்கிட நவீன உணவுக்கூடம் அமைந்திருக்கிறது. இங்கு பணியாற்றுகின்ற மருத்துவர்களுக்கு தனி உணவுக்கூடம், தனி உணவு அருந்தும் அறை, தீயணைப்பு சாதனங்கள், நவீன சலவைக் கூடம், வாகன நிறுத்தும் இடங்கள், உயர் மின்னழுத்த HD line போன்ற வசதிகள் இக்கட்டத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது. 

பணிகள் குறுகிய காலத்திலேயே கட்டி, முடிவு பெறுவதற்கு வாய்ப்புள்ளது. அரசின் சார்பாக இன்று ஆய்வு செய்ததில், மிகச் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பொதுப்பணித் துறையின் சார்பாக தினந்தோறும் நடைபெற்று வரும் பணிகளை பொதுப் பணித் துறை பொறியாளர்கள், தரக்கட்டுப்பாடு பொறியாளர் ஆகியோர் தரத்தினுடைய அளவை பதிவேட்டில் பதியப்பட்டு வருகிறது.

மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் நவீன வசதிகளுடன் உறுதித்தண்மை வாய்ந்ததாக அமையவுள்ளது. இப்பணிகள் வெகு விரைவில் உறுதித்தண்மையுடன் கூடிய கட்டடமாக கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்று மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி. இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், மற்றும் மருத்துவ அலுவலர்கள், பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments