Breaking News

தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது...

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள  பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை 6 மணியளவில் துவங்கியது. 

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் 13 நாட்கள் நடைபெற உள்ளன. அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணி அளவில் பூச்சாட்டு கோவை சரவணம்பட்டி கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் தலைமையிலும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இரா. செந்தில் வேலவன் முன்னிலையிலும் , செயல் அலுவலர் வே. வெற்றிச்செல்வன் மேற்பார்வையிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மேலும் ஸ்ரீ அபிராமி நாட்டியாலயா குழுவினர் நடன நிகழ்ச்சி இரவு 8 மணியளவில் நடைபெற்றது.




No comments

Thank you for your comments