ஆபத்தான மரங்களை அகற்றி விபத்தை தடுக்க கோரிக்கை!
கோவை, ஏப்.20-
கோவை பொள்ளாச்சி - வால்பாறை, மீன்கரை, ஆனைமலை & உடுமலை ரோட்டோரங்களில் எண்ணற்ற மரங்கள் உள்ளன. இதில், பல்வேறு மரங்கள் நோயுற்று பட்டுப்போன நிலையில் உள்ளன.
பல இடங்களில் மரக்கிளைகள் பலவீனமாக தொங்கிய நிலையிலுள்ளன.கடந்த, 10 நாட்களாக ஆனைமலை தாலுகாவில், அதிவேக காற்றுடன் மழை பெய்கிறது. இதனால், ஆபத்தான முறையிலுள்ள மரங்கள், காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் ரோட்டில் சாய்ந்தும், முறிந்து விழுந்தும் போக்குவரத்து பாதிக்கிறது.
இரு நாட்களுக்கு முன், வால்பாறை ரோட்டில், ஆழியாறு அருகே சரக்கொன்றை மரம் ரோட்டில் விழுந்ததில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. நேற்று முன்தினம், பொள்ளாச்சி & வால்பாறை ரோட்டில், கரியாஞ்செட்டிபாளையம் அருகே ரோட்டோரம் இருந்த, மே பிளவர் மரம் வேரோடு சாய்ந்தது. நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.ரோட்டோரத்தில் பட்டுப்போன மரங்கள் மற்றும் பலவீனமான மரக்கிளைகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.
No comments
Thank you for your comments