அங்கம்பாக்கம் பள்ளி மாணவர்களுக்கு தலை வாழை இலை விருந்து
இன்று (29/04/2022) காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து பள்ளியில் பயிலும் 140 மாணவர்களுக்கும் தலை வாழை இலை விருந்து வழங்கப்பட்டது.
மாணவர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு அளிக்கப்பட்டது.
இதுபோன்று தலை வாழை இலை விருந்து வழங்குவது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகும்.
கொரோனா பேரிடர் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விருந்து வழங்கும் நிகழ்வு நடைபெறாத சூழலில் இம்முறை மாணவர்களுக்கு விருந்து வைத்து தலைமையாசிரியர் மற்றும் மாணவர்கள் மகிழ்ந்தனர்..

.jpg)
.jpg)
No comments
Thank you for your comments