Breaking News

திமுக 15வது உட்கட்சி தேர்தல் -காஞ்சிபுரம் மாநகராட்சியில் பகுதி வார்டு கழக தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் 15 வது உட்கட்சி தேர்தலையொட்டி காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் வார்டு கழக தேர்தலுக்காக விருப்பமனுக்கள் விநியோகிக்ப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் காஞ்சி தெற்கு மாவட்த்திற்க்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது.

இந்த 51 வார்டு பகுதி வார்டு கழக தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் காஞ்சிபுரத்தில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் பெறபட்டது.

இந்த பொது தேர்தலில் தலைமை கழக அனுப்பி வைத்துள்ள தலைமை செயற்குழு உறுப்பினர் புரசை கோ.மணி, (தேர்தல் பொறுப்பாளர்) தலைமையில் எம் .முரளி, துளசி, கோதண்டன், கோபால், பால்சாமி, மாவட்ட கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சன்.பிராண்ட் கே.ஆறுமுகம்  உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் கெ. ஞானசேகரன், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர்  பி.எம்.குமார், 

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துச்செல்வம் மாநில வர்த்தக அணி வி. எஸ். ராமகிருஷ்ணன் உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் பி.சசிக்குமார் மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக் துணை அமைப்பாளர் யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 51 வார்டுக்குட்பட்ட திமுகவினர் உட்கட்சித் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகிகப்பட்ட விருப்பமனுவை வாங்கி சென்று  மனுவினை பூர்த்தி செய்து வேட்பு மனுவினையும் தாக்கல் செய்தனர்.







No comments

Thank you for your comments