Breaking News

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - அறிவிப்பு வெளியீடு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்,2009, சட்டப் பிரிவு 12(1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-14ம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வண்ணமும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறும் வண்ணமும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டும் கூடுதல் வழிகாட்டுதலும், திருத்திய கால அட்டவணையும், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களும் கூடுதலாக அரசால் வழங்கப்படுகிறது.

1. எதிர்வரும் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு  காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 147  சிறுபான்மையற்ற தனியார்  சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிகுலேசன் / மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி) நுழைவு நிலை ( LKG ) வகுப்பில் 25% ஒதுக்கீட்டின்கீழ் 2036 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

2. இதற்கான வசதி ret.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் கைபேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தியாக அளிக்கப்படும்.



3.  மேற்காண் சேர்க்கைக்காக விண்ணப்பங்களை Online வழியே  2022 ஏப்ரல் 20 ஆம்  தேதி முதல் 2022 மே 18 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.

4. முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக் கல்வி அலுவலர் / வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யப்படும்.

5. இந்த மாவட்டத்திலுள்ள அரசு இ-சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

6. நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள்  பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

7. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றவர் / எச்.ஐ.வி. யினால் பாதிக்கப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர் /துப்பரவு தொழிலாளியின் குழந்தை/ மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்குக் குலுக்கள் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.

8. மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

No comments

Thank you for your comments