கையெழுத்து பிரச்சாரத்தை கிராமம் தோறும் முன்னெடுத்துச் சென்ற தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா
தருமபுரி:
தோழி கூட்டமைப்பு சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் பணியிடங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு பாலியல் ரீதியான புகார் குறித்து (10க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணி செய்யும் பகுதிகளில்) உள்ளக புகார் குழு(ICC) அமைக்க வேண்டி கையெழுத்து பிரச்சாரத்தை கிராமம் தோறும் முன்னெடுத்துச் சென்ற தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா நல்லம்பள்ளி சீட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவன பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
சீட்ஸ் தன்னார்வத் தொண்டு நிறுவன இயக்குனர் மற்றும் தோழி கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார்.
தோழி கூட்டமைப்பு தலைவர் சங்கர் தலைமை தாங்கி தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கையெழுத்து பிரச்சாரம் நடத்தப்பட்டு சுமார் ஒரு லட்சம் கையெழுத்து பிரதிகள் பெறப்பட்டுள்ளது என்று கூறினார். மேற்கண்ட கையெழுத்துப் பிரதிகளை விரைவில் தமிழக முதலமைச்சரை சந்தித்து வழங்குவதாக கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மூர்த்தி, இணை இயக்குனர், அகில இந்திய ரேடியோ, (செய்தி பிரிவு) பெங்களூர், கர்நாடகா மற்றும் நீலகண்டன், மண்டல இயக்குனர், நேரு யுவகேந்திரா, தஞ்சாவூர் தே.சரவணன், தலைவர், குழந்தைகள் பாதுகாப்பு குழு, சமூக பாதுகாப்புத் துறை, தர்மபுரி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் CRDS நிறுவன இயக்குனர் சிவக்குமார், RDS நிறுவன இயக்குனர் தர்மலிங்கம், SMD நிறுவன இயக்குனர் தனலட்சுமி,விப்ரோ நிறுவன இயக்குனர் வெங்கடேசன், சிற்பி தொண்டு நிறுவன இயக்குனர் கமலக்கண்ணன், திருவள்ளுவர் அறக்கட்டளை இயக்குனர் வேல்விழி, சேவா தொண்டு நிறுவன இயக்குனர் துரை மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தோழி கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments