Breaking News

ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளின் மௌனம் செயலற்ற தன்மை

 ராமநவமி பேரணிகளில் போது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தேசிய தலைவர் ஓ எம் ஏ ஸலாம் கண்டனத்தை அடுத்து இந்துத்துவாவின் முயற்சிக்கு எதிரான ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளின் மௌனம் செயலற்ற தன்மை குறித்து இந்திய ஜனாதிபதி அவர்களுக்கு கவன ஈர்ப்பு மனுவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி அவர்களிடம் வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை மண்டல செயலாளர் அகமது மொய்தீன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி அவர்களிடம் ராமநவமி பேரணியின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தேசிய தலைவர் ஓ எம் ஏ ஸலாம் இந்துத்துவாவின் முயற்சிக்கு எதிரான ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளின் மௌனம் மற்றும் செயலற்ற தன்மை குறித்து கண்டனத்தை தெரிவித்தார். 

இவை குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தின் போது நடத்தப்பட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் நாடுதழுவிய முஸ்லிம் எதிர்ப்பு கலவரம்களுக்கான இந்துத்துவ அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் ஹரித்துவாரில் நாட்டின் பிற பகுதிகளிலும் இந்துத்துவா நிகழ்ச்சிகள் இனப்படுகொலைக்கான அழைப்பு விடுக்கப்பட்டதாக வலது சாரி குண்டர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இது குறித்து நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த அவர்களுக்கு வன்முறையை தூண்டும் வகையில் வெறுப்பு மற்றும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கான சந்தர்ப்பவாதமாக இந்துமதப் பண்டிகைகளை தவறாக பயன்படுத்துகின்றன. 

அதிகரித்துவரும் வன்முறைக்கு அதிகாரிகள், காவல்துறையினர் துணைநின்று வன்முறையை தடுக்க சில சந்தர்ப்பங்களில் இந்துத்துவா கும்பல்களுக்கு உதவியோடு உடந்தையாக இருந்துள்ளதாக வன்முறையை தூண்டி அவர்களை பின்தொடர்ந்து அதற்கு பதிலாக வயதான பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட அப்பாவி முஸ்லிம்களை காவல்துறை துன்புறுத்துவதாக கண்டனம் தெரிவித்தார். 

மத்திய பிரதேசத்தில் வன்முறையைத் தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான கலவரங்களுக்கு சொந்தமான இடம் என்றும் எந்தவிதமான நடைமுறையும் கடைபிடிக்காமல் டஜன் கணக்கான முஸ்லிம்கள் வீடுகள் மற்றும் சொத்துக்கள் காவல்துறை இடித்து தள்ளி உள்ளனர். 

சந்தேகத்தின் பேரில் மக்கள் சொத்துக்களின் எடுக்க காவல்துறை அனுமதி வழங்கியது போல் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை சட்ட வழிமுறை சட்டம் முஸ்லிம்களுக்கு மாற்றப்படுகிறது எனவே வகுப்புவாத மோதல் அல்ல மாறாக இந்துத்துவா குண்டர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வழியாக பேரணி நடத்தி ஆட்சேபனைக்குரிய கோசங்களை எழுப்பவும் பாடல்கள் பாடியும் சமூகத்தை தூண்டிவிடும் வகையில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக உள்ளது. 

மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் மௌனம் மட்டும் செயலற்ற தன்மை ஏமாற்றமளிக்கிறது. எனவே இந்துத்துவா சக்திகளுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இந்த நாடு அமைதியான சகவாழ்வின் பூமியாக இருக்க வேண்டுமானால் இந்த இந்துத்துவா தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய தலைவர் அவர்கள் தெரிவித்தார். 

மாநிலங்கள் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை மண்டல மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் இந்திய ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் வகையில் கவனயீர்ப்பு மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சென்னை மண்டல செயலாளர் அகமது மொய்தீன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சதக்கத்துல்லா, எஸ்டிபிஐ காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜாபர் ஷரீப், காஞ்சிபுரம் யூனிட் தலைவர் தாதா பீர் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

No comments

Thank you for your comments