ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு- தேர்வு வாரியம்
சென்னை, ஏப்.18-
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) சமீபத்தில் 2022-ம் ஆண்டுக்கான அட்டவணையை வெளியிட்டது. அதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இதற்கிடையே, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மார்ச் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 13ம் தேதி என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவினை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டதை அடுத்து 18.04.2022 முதல் 26.04.2022 வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (18.04.2022) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்வை பொறுத்தவரையில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 என்ற அடிப்படையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/TET_2022/18042022/Press%20News.pdf என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளம் 👆 http://www.trb.tn.nic.in/
No comments
Thank you for your comments