ரவுடிகளை கண்காணித்திட ரோந்து வாகனங்கள் துவக்கி வைப்பு...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சரித்திர பதிவேடு ரவுடிகளையும் மற்றும் அதற்கு துணைபோவோர்களையும் கண்காணிக்கும்பொருட்டு அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் மற்றும் அவர்கள் நடமாடும் இடங்களிலும் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய காவலர்கள் அனுதினமும் ரோந்து செய்யும் வகையில் நன்கு பயிற்சிபெற்ற இத்தகைய நடவடிக்கையில் திறம்பட செயல்படக்கூடிய காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த காவலர்களுக்கு தேவையான அனைத்து உபகரனங்களும் வழங்கப்பட்டுள்ளது. இது மேலும் மேம்படுத்தப்படும்.
அவ்வாறு செய்ல்திறன் பயிற்சி ஒருங்கேபெற்ற ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து செய்யும் பகுதிகளில் ஏதேனம் அசம்பாவிதம் உன்னித்து கண்காணித்து அதற்கு ஏற்றால்போல் கடுமையான நடவடிக்கை எடுத்து தொடர்ந்து பணியாற்றுவர்.
மாவட்டத்தில் அமைதி நிலவவும், சட்டம் மற்றும் ஒழுங்கு சீராக பராமரிக்கப்படவும் மேற்கூறிய இந்த ஆயுதம் ஏந்திய காவலர்கள் முனைப்புடன் செயல்பட்டு சமூக விரோதிகள் மீதான நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும்.
இந்த ரோந்து வாகன காவலர்கள் அடங்கிய பல்வேறு குழுவினரை காவல்துறை துணைத் தலைவர் எம். சத்தியபிரியா, காஞ்சிபுரம் சரகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் அவர்களும் ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் உரையாற்றி, ஊக்குவித்து கொடி அசைத்து இன்று (20.04.2022) துவக்கி வைத்தனர்.
No comments
Thank you for your comments