காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அளவூர் வி. நாகராஜன் தலைமை தலைமை தாங்கினார். நகர தலைவர் நாதன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக மத்திய அரசை கண்டித்து பேரணியாக சென்றனர்..
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள், எஸ்.சி. துறை நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், சிறுபாண்மை பிரிவு நிர்வாகிகள், வர்த்தக பிரிவு காங்கிரஸ் நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மற்றும் துணை அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments