கேன்-பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர்களில் பேராபத்து!
வேலூர், ஏப்.4-
கோடை வெயில் இப்போதே கொளுத்தத் தொடங்கிவிட்டது. தாகம் தீர்க்க எந்தத் தயக்கமும் இல்லாமல் பாட்டில் தண்ணீரை லிட்டர் கணக்கில் வாங்கிக் குடிக்கிறோம். அந்தத் தண்ணீரில் நுண்நெகிழி கலந்திருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நம் கண்ணுக்குத் தெரியாமல், தண்ணீர் வழியாக வயிற்றுக்குள் செல்லும் ‘மைக்ரோபிளாஸ்டிக்’ (Micro plastic) எனும் நுண்ணிய நெகிழித் துகள்கள் உடலுக்கு நஞ்சாவது குறித்து சூழலியலாளர்கள் எச்சரித்துக் கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனால், அந்த ஆபத்தை அறியாமல் இருப்பவர்கள்தான் நம்மிடம் அதிகம். இந்தச் சூழலில், நெகிழித் துகள்கள் ஆபத்தை 100% உறுதிசெய்யும் விதமாக, நெதர்லாந்தில் நடைபெற்ற ஆய்வின் முடிவு ஒன்று தற்போது மருத்துவத் துறையில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.
பிளாஸ்டிக் பெட்பாட்டில், பிளாஸ்டிக் கேன்கள் ஆகியவற்றில் அடைத்து விற்கப்படும் குடிநீரை பயன்படுத்துவது இப்போது அதிகரித்துள்ளது. பெரும்பாலான நகரங்களில் இந்த வகை குடிநீரைத்தான் மக்கள் நம்பி இருக்கிறார்கள். உலகம் முழுவதும் இதே நிலை உருவாகி விட்டது. பெரும்பாலான மக்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களையே தங்களுடன் எடுத்துச்சென்று தேவையான நேரங்களில் பயன்படுத்துகிறார்கள். இந்த கலாச்சாரம் இப்போது நாகரீகமாகவும் மாறிவிட்டது. ஆனால், பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று ஆய்வு தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது.
இந்த பாட்டிலில் உள்ள தண்ணீரை 1.5 மைக்ரான் அதாவது 0.0015 மில்லி மீட்டர் அளவு துவாரம் கொண்ட வடிகட்டி மூலம் வடித்தெடுத்து பின்னர் அந்த வடிகட்டியில் தேங்கியுள்ள பொருட்களை ஆய்வு செய்தார்கள். மைக்ராஸ்கோப் மற்றும் இன்ப்ரா ரெட் பரிசோதனை மூலம் இந்த ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அதில் ஏராளமான பிளாஸ்டிக் மற்றும் ரசாயன துகள்கள் இருந்து தெரியவந்தது. அதாவது பாலிபுரோப்லின், நைலான், பாலித்தீன், டெரபதலேட் (பெட்) துகள்கள் அந்த வடிகட்டியில் தேங்கி இருந்தன. அதாவது தண்ணீருக்குள் இந்த துகள்கள் கலந்து இருந்தன.
சராசரியாக ஒரு லிட்டர் தண்ணீரில் 0.1 மில்லி மீட்டர் அளவு கொண்ட 10.4 பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருந்தன. சில பாட்டில்களில் ஒரு லிட்டர் நீரில் 10 ஆயிரம் துகள்கள் கூட கலந்திருப்பது தெரியவந்தது. ஒருசில பாட்டில்களில் மட்டுமே இந்த துகள்கள் இல்லாமல் இருந்தது. மொத்தம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 93 சதவீத பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி குடிநீர் வர்த்தம் என்று தொடங்கியதோ அப்போதே நிலத்தடி நீர் சுரண்டலும் ஆரம்பமாகியது... இதனால் பொதுமக்கள் வேறு வழியின்றி கேன் குடிநீருக்கு மாற்றமாகிவிட்டனர்.. பெயர்தான் மினரல் வாட்டர் ஆனால் அதில் சிறுதும் மினரல் இருப்பதில்லை... அதில் இருக்கும் மினரல் சத்துகளையும் அடியோடு நீக்கபடுகிறது என்பதுதான் நிதர்சனம்.. இதற்கு ஆதாரமே இன்று சிறுயவர்கள், பெண்கள் என பெரும்பாலனோருக்கு தைராய்டு பொதுவான நோயாக உள்ளது. உடல் பருமன் என பல்வேறு பாதிப்புக்கு ஆளாவது இந்த கேன் தண்ணீர் என்பதில் ஐயமில்லை... தண்ணீரில் உள்ள உப்பு சத்து, அயோடின் உட்பட அதில் உள்ள சத்துக்கள் நீக்கப்படுகின்றன என்று குற்றச்சாட்டுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளது... அதுமட்டுமின்றி சில நிறுவனங்கள் தண்ணீரை சுத்தம் செய்யாமல் ஏதோ கெமிக்கல் கலப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது...
ஒரு சில நிறுவனங்களை தவிர பெரும்பாலான நிறுவனங்கள் விதிமுறைகளையோடு செயல் படுவதில்லை... தண்ணிரில் உள்ள சத்துக்கள் பாதுகாக்கப்பட்டு அசுத்தங்களை நீக்கி அதிக சத்துக்களோடு தண்ணிரை வழங்கவேண்டும் அதுதான் மினரல் வாட்டர்... ஆனால் தற்போது விற்பனையில் உள்ள பெரும்பாலானவைகள் மினரல் வாட்டரா? என்பது கேள்விக்குறியோ... ஆனால் அரசோ இதற்கான விதிமுறைகளை முறையாக வகுத்து, தற்போது செயல்படும் மினரல் வாட்டர் நிறுவனங்களை ஆராய தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுகளை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்......
அதுமட்டுமின்றி மினரல் வாட்டர் நிறுவனங்கள் நிறைய முளைத்துவிட்டன... இந்த நிறுவனங்களை நம்பிதான் பொதுமக்கள் வாழவேண்டும் என்ற கட்டாய சூழலை உருவாக்கிவிட்டனர்...
குடியிருப்பு பகுதிகளிலும் செயல்படும் மினரல் வாட்டர் நிறுவனங்கள் 1500அடிக்கு மேல் பல ஆழ்துளை கிணறுகளை தோண்டி நிலத்தடி நீரை சுரண்டுகின்றனர். இதனால் குடியிருப்புவாசிகள் தண்ணீரின்றி தவிக்கின்றனர். இதனால் அடிப்படை தேவைக்கே பொதுமக்கள் நிலத்தடி நீரின்றி பெரிதும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்... இதுபோன்று குடியிருப்பு பகுதிகளில் உள்ள மினரல் வாட்டர் நிறுவனங்கள் செயல்படுவதை தடைசெய்யவேண்டும்...
அதுமட்டுமின்றி மினரல் வாட்டர் சுத்தகரிப்பு செய்து கழிநீர் அங்கேயே நிலத்தடியில் விடுவதால் நிலத்தடி நீரில் அதிகபடியான உப்புத்தண்மை ஏற்படுகின்றன... இதனால் சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி வீட்டில் உள்ள பாத்திரங்கள் முதல் குழாய் பழுப்புகள் என அனைத்தும் அதிகபடியான துரு ஏற்படுகிறது... இதனால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றன...
ஒரு உயிரிரினம் வாழ முதல் அடிப்படையான தேவை தண்ணீர்தான்... ஆனால் அரசு ஏன் இதன்மீது அக்கறைகொள்ளவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது... தற்போது உள்ள திமுக அரசாவது மக்களின் நலனை கருதில்கொண்டு மினரல் வாட்டர் நிறுவனத்திற்கு விதிகளை வகுத்து... செயல் பட்டுவரும் அனைத்து மினரல் வாட்டர் நிறுவனங்களையும் ஆய்வு படுத்துவேண்டும் என்று பொதுமக்க்ள கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தொடங்கி உள்ள கோடைகாலத்தால் மினரல் வாட்டர் நிறுவனங்களால் பொதுமக்கள் மேலும் பாதிப்புக்குள்ளாகின்றனர்...
குடிநீர் பாட்டில் மட்டுமின்றி இந்த நுண்நெகிழி’கள் பல்வேறு வகையில் நம்மை வந்தடைகின்றன.
அதாவது, அளவில் 5 மி.மீ.க்கும் குறைவாக உள்ள நெகிழித் துகள்களை ‘நுண்நெகிழி’ என்கிறோம். பொதுவாக, நெகிழிப் பொருட்கள் சிதையும்போது உருவாகும் நுண் துகள்தான் இந்த ‘வில்லன்’கள். காலையில் எழுந்ததும் பல் துலக்கப் பயன்படுத்தும் பற்பசை, பல்துலக்கி, முகம் கழுவ உதவும் ‘ஃபேஸ்வாஷ்’ தொடங்கி, ஆடைகள், உணவுக் கலம், தண்ணீர் பாட்டில், பைகள் என நம் அன்றாடப் பயன்பாடு பலவற்றிலும் நெகிழிப் பயன்பாடு உள்ளது. சாதாரணமாக நாம் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் நெகிழிப் பொருட்கள் உடைந்தும் சிதைந்தும் நிலத்திலும் நீரிலும் கலந்துவிடுகின்றன.
அந்த நிலத்தில் விளையும் காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடும்போது அவை நம் உடலுக்குள் புகுந்துவிடுகின்றன. நெகிழிக் கலத்தில் உள்ள நீரையோ நெகிழி கலந்த நீரையோ பருகும்போது இதே பிரச்சினை ஏற்படுகிறது. நெகிழிக் கழிவுகள் வருடந்தோறும் டன் கணக்கில் கடல்நீரில் கொட்டப்படுகின்றன. இவற்றை உணவாகக் கொள்ளும் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளால் உணவுச் சங்கிலி மூலம் நுண்நெகிழி நம்மை வந்தடைகிறது. நெகிழிப் பொருட்கள் எரிக்கப்படுவதால் விளையும் நச்சுப்புகை காற்றில் கலக்கும்போது, நாம் சுவாசிக்கும் காற்று மாசடைகிறது. அந்தக் காற்றின் வழியாக நுண்நெகிழித் துகள்கள் நம்மை வந்தடைகின்றன. இந்த வழிகள் மட்டுமல்லாமல், நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பேக்கிங் பொருட்கள் வழியாக நுண்நெகிழி நம் உடலில் சேர்வதும் உண்டு.
கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை நுண்நெகிழித் துகள்களால் உயிரிப் பன்மைக்கு ஆபத்து இல்லை என்றே அறிவியல் உலகம் நம்பிக்கொண்டிருந்தது. 2008ல் மார்க்கஸ் எரிக்ஸனும் மார்க் பிரவுனியும் தனித்தனியாக மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள் இந்த நம்பிக்கையைக் குலைத்துப்போட்டன. வடக்கு பசிபிக் கடலில் இருந்த மீனின் உடலுக்குள் 18 வகை நுண்நெகிழிகள் இருந்ததைப் படம்பிடித்தார் எரிக்ஸன். இது பெரும் அதிர்வலையை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து நுண்நெகிழித் துகள்களால் உருவாகும் ஆபத்துகளை உணரத் தீவிரமாகப் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
‘நுண்நெகிழிகளைக் கடல்வாழ் உயிரினங்கள் இரையாக நினைத்து உட்கொள்கின்றன. இதனால் அவற்றின் உடல் உறுப்புகள் சிதைவடைகின்றன. சுவாசப் பிரச்சினை, உணவுச் சங்கிலி பாதிப்பு என அவை எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம். இவற்றோடு அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. பல லட்சக்கணக்கான கடல்வாழ் உயிரிகள் அழிகின்றன’ என்கின்றனர் கடல் ஆராய்ச்சியாளர்கள். இவர்களின் அறைகூவலை உறுதிசெய்யும் விதமாக சென்னை பட்டினப்பாக்கத்தில் விற்கப்பட்ட 7 மீன் வகைகளில் நெகிழித் துகள்கள் கலந்திருப்பதாகத் தேசியக் கடலோர ஆராய்ச்சி மையம் நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்தது.
இந்தத் தகவல்களைத் தொடர்ந்து மனிதர்களின் உடலுக்குள்ளும் நுண்நெகிழிகள் புகுந்துள்ளன எனும் தகவல் அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இவற்றில் 2018ல் ஆஸ்திரேலியாவில் வியன்னா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு முக்கியமானது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து 3 ஆண்கள், 5 பெண்கள் என 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். ஒரு வாரம் அவர்கள் எடுத்துக்கொண்ட கடல் உணவு வகைகள், நெகிழி உறையில் கொண்டுவரப்பட்ட உணவு வகைகள், நெகிழி பாட்டில் தண்ணீர் ஆகியவை குறிப்பெடுக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் அவர்களின் கழிவுகள் சோதிக்கப்பட்டன. ஆய்வின் முடிவில் மனிதக் கழிவுகளில் நுண்நெகிழிகள் இருப்பது கண்டறியப்பட்டன. இதைத் தொடர்ந்து, இத்தாலியில் 8 கர்ப்பிணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பனிக்குடச் சவ்விலும் நஞ்சுக்கொடியின் அருகிலும் சிசுவின் மலத்திலும் நுண்நெகிழிகள் இருக்கின்றன என்று வந்த தகவல் மருத்துவத் துறையினரைத் திடுக்கிட வைத்துள்ளது.
சமீபத்தில் நெதர்லாந்தில் 22 தன்னார்வலர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 17 பேரின் ரத்த அணுக்களில் நுண்நெகிழிகள் காணப்பட்டன. இவர்களிடம் காணப்பட்ட முக்கிய நுண்நெகிழிகள், தண்ணீர் பாட்டிலில் பயன்படுத்தப்படும் பாலிஎத்திலின் டெரிப்தலேட் (PET), பேக்கிங் பொருட்களில் பயன்படுத்தப்படும் பாலிஸ்டிரின் (Polystyrene), கேரிபேக்குகளில் பயன்படுத்தப்படும் பாலிஎத்திலின் (Polyethylene). 2040ல் இந்த நுகர்பொருட்களின் உற்பத்தி 2 மடங்காக அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் அறிவித்திருக்கும் சூழலில், இந்த ஆய்வின் முடிவுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
நுண்நெகிழிகள் ரத்தத்தின் வழியாக உடலுக்குள் பயணம் செய்யலாம் என்றுதான் இதுவரை அறியப்பட்டது. இப்போது முதல் முறையாக நுண்நெகிழிகள் ரத்த அணுக்களையே பாதிக்கும் எனும் தகவல் வெளிவந்திருக்கிறது. இதை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. காரணம், இந்தத் துகள்கள் ரத்த அணுக்களைச் சிதைப்பதில் தொடங்கி, உடலுக்குள் ஆக்ஸிஜன் விநியோகத்துக்குத் தடை போடுவது, குடல், எலும்பு, நரம்பு, சிறுநீரகம் எனப் பல்வேறு உடல் உறுப்புகளில் பதியமாகி அந்த உறுப்புகளையும் சிதைப்பது எனப் பேராபத்துகளை ஏற்படுத்துவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மலட்டுத்தன்மை, ஹார்மோன் பாதிப்புகள், புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்துகளையும் இவை ஏற்படுத்தலாம் என்ற அளவில் பேசப்படுகிறது. போகப்போக இந்த ஆய்வுகளை விரிவுபடுத்தும்போது மேற்சொன்ன ஆபத்துகள் உறுதிசெய்யப்படலாம். தற்போதைய காரணம் தெரியாத மரணங்களுக்கு இவைகூடக் காரணமாக இருக்கலாம்.
நெகிழிப் பயன்பாடு இல்லாத உலகை இப்போது நினைத்துப் பார்ப்பது சிரமம்தான். தற்போது, திடக்கழிவுகளாக நம் முன்னால் காட்சியளிக்கும் நெகிழியை அகற்றவே திணறிக்கொண்டிருக்கிறோம். 2016ல் உருவான திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் கையாலாகாத நிலைமையில்தான் உள்ளது. நெகிழிப் பொருட்கள் தயாரிப்பு குறித்த மத்திய அரசின் விதிகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. உபயோகிப்பது உடையானாலும், உபகரணம் ஆனாலும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய, முழுதாக மறுசுழற்சி செய்யக்கூடிய நெகிழிப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்பதில் மக்களும் அரசுகளும் அக்கறை காட்ட வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவில் கண்ணுக்குத் தெரியும் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் ஆபத்துகளைவிட கண்ணுக்குத் தெரியாத நுண்நெகிழிகளால் ஏற்படும் ஆபத்துகள் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். ஆகவே, அரசுகளும் பொதுமக்களும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது!
No comments
Thank you for your comments