Breaking News

மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி அறிவிப்பு

வேலூர், ஏப்.19-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வேலூர் பிரிவு அலுவலகத்தின் மூலம் 2021-2022ஆம் ஆண்டுக்கு மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் காட்பாடியிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 21.04.2022 அன்று நடத்தப்படவுள்ளது.

மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது.  போட்டிகளில் ஆண்கள் அணி மட்டுமே கலந்து கொள்ளலாம்.

·மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மண்டல அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். 

·மேற்படி போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது நுழைவு விண்ணப்பத்தினை 20.04.2022-க்குள் கீழ்க்கண்ட முகவரியில் பதிவு  செய்ய வேண்டும்.  போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் கம் லீக் முறையில் நடத்தப்படும்.   மேற்கண்ட போட்டிகளின்போது தேர்வுக் குழுவினரின் தீர்ப்பே இறுதியானது.  

·இதில் கலந்து கொள்ள பயணப்படி மற்றும் தினப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது.  வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த நபர்கள் மட்டுமே இதில் பங்குபெறலாம்.  போட்டிகள் அனைத்தும் சர்வதேச ஹாக்கி சங்கத்தின் விதிகளின்படி நடத்தப்படும்.   முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்படும்.

·21.04.202 அன்று காலை 8.00 மணிக்கு போட்டிகள் நடைபெறும் என்று இதன் மூலம் தெரிவித்துக்  கொள்ளப்படுகிறது. 

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேதாஜி விளையாட்டு அரங்கம்,  வேலூர். தொலைபேசி எண்.0416-2221721

மேலும், விவரங்களுக்கு 7401703483 என்ற  அலைபேசி எண்ணில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்  பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments