Breaking News

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான தடகளம் மற்றும் குழுப்போட்டிகள் அறிவிப்பு

வேலூர், ஏப்.19-

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 2021-22ஆம் ஆண்டிற்கான வேலூர் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான தடகளம் மற்றும் குழுப்போட்டிகள் (ஆண், பெண் இருபாலாருக்கும்) காட்பாடியிலுள்ள மாவட்ட விளையாட்டரங்கில் 28.04.2022அன்று காலை 9.00 மணி முதல் பின்வருமாறு நடத்தப்பட உள்ளன.

அ.தடகளப்போட்டிகள் விவரம்

கை, கால்  ஊனமுற்றோர் :

50மீ ஓட்டம் - கால் ஊனமுற்றோர், 100மீ ஓட்டம் - கை ஊனமுற்றோர், 50மீ ஓட்டம் - குள்ளமானோர், குண்டு எறிதல் - கால் ஊனமுற்றோர்,100மீ சக்கர நாற்காலி - இருகால்களும் ஊனமுற்றோர்

பார்வையற்றோர் :

50மீ ஓட்டம்- முற்றிலும் பார்வையற்றோர், 100மீ ஓட்டம்-மிகக்குறைந்த பார்வையற்றோர், நின்ற நிலை தாண்டுதல் -மிகக்குறைந்த பார்வையற்றோர், குண்டு எறிதல் - முற்றிலும் பார்வையற்றோர், ளுடிகவ க்ஷயடட   - மிகக்குறைந்த பார்வையற்றோர்

மனநலம் பாதிக்கப்பட்டவர் :

50மீ ஓட்டம் - புத்தி சுவாதீனம் தன்மை முற்றிலும் இருக்காது, ளுடிகவ க்ஷயடட எறிதல் - புத்தி சுவாதீனம் தன்மை முற்றிலும் இருக்காது, 100மீ ஓட்டம் - புத்தி சுவாதீனம் தன்மை நல்ல நிலையில் இருக்கும், நின்ற நிலை தாண்டுதல் - புத்தி சுவாதீனம் தன்மை முற்றிலும் இருக்காது, குண்டு எறிதல் - புத்தி சுவாதீனம் தன்மை நல்ல நிலையில் இருக்கும்

காதுகேளாதோர்  :

100மீ ஓட்டம், 200மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400மீ ஓட்டம் 

ஆ.குழுப்போட்டிகள் 

1. மாற்றுத் திறனாளிகள் பிரிவு (ஆண்/பெண்)  

·இறகுப்பந்து (ஒற்றையர்/இரட்டையர்) அணி - அதிகபட்சம் 5 பேர்

· மேசைப்பந்து அணி - அணிக்கு இருவர் வீதம்

2.கண்பார்வை அற்றோர் பிரிவு (பார்வைக் குறைவானவர்கள்/பார்வையற்றோர்) (ஆண்/பெண்)  

· அடாப்டட் வாலிபால் அணி - அதிகபட்சம் 7 பேர்

3.மன வளர்ச்சி குன்றியோர் பிரிவு (ஆண்/பெண்)  

·எறிபந்து அணி - அதிகபட்சம் 7 பேர்

4.காது கேளாதோர் பிரிவு (ஆண்/பெண்)  

·கபாடி அணி - அதிகபட்சம் 7 பேர்

விதிமுறைகள்

1. மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடங்களைப் பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். 

2. மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பவர்கள் குறிப்பிட்ட பிரிவில் விளையாடுவதற்கு அக்குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவரா என  உறுதி செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்று/மாவட்ட மறுவாழ்வு அதிகாரியினால் வழங்கப்பட்ட சான்றின் நகலினை அவசியம் கொண்டு வருதல் வேண்டும்.

3. மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.

4. ஒருவர் ஒரு விளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். 

5. போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு தினப்படி / பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது.  மதிய உணவு வழங்கப்படும்.  வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 

6. தடகளம் மற்றும் குழுப்போட்டிகள் (இருபாலருக்கும்) ஆகியவற்றுக்கான மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது.

7. மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்காமல் நேரிடையாக மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெற இயலாது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை அலுவலக நேரங்களில் 0416-2221721 அல்லது 7401703483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments