மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாகவுள்ள உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
காஞ்சிபுரம்:
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாகவுள்ள உதவி வரவேற்பாளர் (100% பார்வையற்றவர்களுக்கானது) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாகவுள்ள உதவி வரவேற்பாளர் (100% பார்வையற்றவர்களுக்கானது) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கு ஆதரவற்ற விதவை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 18 வயது முதல் 42 வயதுக்குள் 100% பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், ஓயர் நாற்காலி பின்னும் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் 100% மாற்றுத்திறனாளிகள் 12.04.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, தெரிவித்துள்ளார்கள்.
.jpg)
No comments
Thank you for your comments