மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள ”ஆற்றுப்படுத்துநர்” மற்றும் "புறத்தொடர்பு பணியாளர்" அறிவிப்பு
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு, இயங்கிவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள ”ஆற்றுப்படுத்துநர்” (Counsellor) மற்றும் "புறத்தொடர்பு பணியாளர்" (Out Reach Worker) பணியிடத்தை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பிட அதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
ஆற்றுப்படுத்துநர் பதவிக்கான கல்வித்தகுதி (10+2+3) உளவியல் / சமூகப்பணி / சமூகவியல்கள் போன்ற துறையில் வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் குழந்தை சார்ந்த பணிகளில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், மாத தொகுப்பூதியம் ரூ.14,000/-
புறத்தொடர்பு பணியாளர் பதவிக்கான கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குழந்தை சார்ந்த பணிகளில் ஓராண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். மாத தொகுப்பூதியம் ரூ.8,000/-
மேற்கூறிய பணியிடங்களுக்கு தகுதிகளை பெற்றிருப்பவர்கள் மட்டும் இப்பதவிக்கு விண்ணப்பித்தல் வேண்டும். வயது வரம்பு 40 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்கள் www.kancheepuram.nic.in என்ற வளைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.317, K.T.S மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம் – 631502 என்ற முகவரியிலும் பெற்றுக்கொள்ளலாம்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களை வருகிற 16.05.2022 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண்.317, K.T.S மணி தெரு,
மாமல்லன் நகர்,
காஞ்சிபுரம் – 631502,
தொலைபேசி எண்,044-27234950,

No comments
Thank you for your comments