30.04.2022 அன்று மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டி அறிவிப்பு
காஞ்சிபுரம்
மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டி ஆண்களுக்கு மட்டும் 2021-2022 ஆம் ஆண்டிற்கு 30.04.2022 தேதியன்று காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்துதல் போட்டியில் கலந்து கொள்ள ஹாக்கி வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டுப்பிரிவின் சார்பாக மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டி ஆண்களுக்கு மட்டும் 2021-2022 ஆம் ஆண்டிற்கு 30.04.2022 தேதியன்று காலை 9.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்த செய்தியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் .மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கையில், இப்போட்டியில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது. போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடத்தப்படும். இப்போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் 29.04.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அணிகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகள் மண்டலப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி/கல்லுhரி/தனியார் நிறுவனங்களில் பயிலும்/பணிபுரியும் வீரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர், டாக்டர்.மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments