Breaking News

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 2022 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

காஞ்சிபுரம்:

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 2022 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015  ஆம்  ஆண்டு முதல் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூபாய் 50,000 பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை  உள்ளடக்கியதாகும்.

இதுகுறித்த செய்தியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்  மா .ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2022 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.   

இவ்விருது தொடர்பாக 15 வயது முதல் 35 வயது வரை  உள்ள  கீழ்காணும் தகுதிகள் உள்ள ஆண் / பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 2022 அன்று (01.04.2022) 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் 31.03.2022 அன்று 35 வயதுக்குள்ளவராக இருத்தல் வேண்டும்.  

கடந்த நிதி ஆண்டில் (2021 – 2022) அதாவது 01.04.2021 முதல் 31.03.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசளிக்கப்படும். 

விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5  வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக    இருத்தல் வேண்டும்.  (அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்) விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்பட கூடியதாகவும் அளவிட கூடியதாகவும் இருத்தல் வேண்டும். 

மத்திய / மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம் 10.05.2022 மாலை 4.00 மணி ஆகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 7401703481 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா .ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.



No comments

Thank you for your comments