Breaking News

05.04.2022 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு

காஞ்சிபுரம்: 

காஞ்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காஞ்சிபுரம் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வரும் 05.04.2022 செவ்வாய்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. 

அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரத்தைச் சுற்றியுள்ள சில பகுதிகளான ஒலிமுகமதுப்பேட்டை, வெள்ளைகேட், கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், நெட்டேரி, சி.வி.எம். நகர், ஜே.ஜே.நகர், புது நகர், ஈஞ்சம்பாக்கம், விஷகண்டிகுப்பம், மோட்டூர், செம்பரம்பாக்கம், செட்டியார் பேட்டை, பொன்னேரிக்கரை, அன்னை தெரசா நகர், ஆரியபெரும்பாக்கம், புதுப்பாக்கம், பெரியகரும்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 05.04.2022 செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மின் தடை ஏற்படும். 

இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் / வடக்கு கோட்ட செயற்பொறியாளர்  தெரிவித்துள்ளார். 

No comments

Thank you for your comments