கோவிட் - 19 பெருந்தொற்றினால் இறந்த நபர்களின் வாரிசுகள் கருணைத் தொகை பெற புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
சென்னை :
கோவிட் - 19 பெருந்தொற்றினால் இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவது தொடர்பாக மாண்புமிகு உச்சநீதி மன்றத்தின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கோவிட் - 19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத் தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் (Death Ascertaining Committee) மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 இனங்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13,204 மனுக்கள் ‘இருமுறை பெறப்பட்ட மனு’ என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வழக்கு எண். I.A. No. 40111 / 2022 in M. A. No. 1805 / 2021 in W.P No.539 / 2021, நாள் 20.03.2022-ல் வழங்கிய தீர்ப்பில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. 20.03.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.05.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
2. 20.03.2022 முதல் ஏற்படும் கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
3. சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
4. மேற்குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் (District Revenue Officer) முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் (District Revenue Officer) தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.
எனவே கோவிட் - 19 தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
ஆங்கிலத்தில் படிக்க...
The application for grant of ex-gratia to
person deceased due to Covid -19 is received through www.tn.gov.in and considered by the District Level Death
Ascertaining committee. So far
74,097/- applications have been received, of
which ex-gratia relief of Rs.50,000/- has been sanctioned to
55,390 cases and 13,204 applications were rejected
on the grounds of duplication, etc.
In the meantime, the Hon'ble Supreme
Court in I.A No.40111/2022 in
M.A No. 1805 / 2021 in
W.P No. 539 / 2021,
dated : 20.03.2022 have
issued the following directions regarding receipt and processing of Covid -19
ex-gratia applications.
1. The claimants in case of Covid - 19 death occurred prior to
20.03.2022 , shall apply for ex-gratia amount
within 60 days (18.05.2022)
2. For Covid -19 deaths,
occurred on and after 20.03.2022 ex-gratia
claims shall be made within 90 days of
occurrence of death.
3. The application received shall be disposed by the competent authority
within 30 days.
4.
Those claimants who could
not make application, in case of extreme hardship, can approach the District
Revenue Officer for Grievance Redressal. The Committee headed by District
Revenue Officer has to consider these claims on case to case basis on merits.
Hence the kith and kin of the person
deceased due to Covid -19 are
requested to apply for ex-gratia in time as stipulated by the Hon'ble Supreme
court.
No comments
Thank you for your comments