Breaking News

TNUSRB போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி

வேலூர், மார்ச் 30-

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்  தேர்வுகளுக்கான (TNUSRB இலவச பயிற்சி வகுப்புகள் தற்போது நேரடியாக நடத்தப்படவுள்ளது. 

444 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காலியிடங்கள்  இடம்பெற்றுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். 

மேலும், 11,000 காவலர்களுக்கான அறிவிப்பும் (Constable Grade-II-6000  பணிக்காலியிடங்கள் Jail Warden Grade-II-3000 பணிக்காலியிடங்கள் Firemen-2000 பணிக்காலியிடங்கள்) விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 

இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆகும். கிராமப்புர மாணவர்கள் உட்பட அனைத்துப் போட்டியாளர்களும் பயனடையும் வகையில் நேரடியாக வேலைவாய்ப்புத்துறை சார்பில் சிறந்த பயிற்சி வல்லுநர்களால் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

மேலும், https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காடிணாலி வழி கற்றல், மின்னனு பாடக்குறிப்புகள், புத்தகங்கள், போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 

போட்டித் தேர்வு எழுதும் போட்டியாளர்கள் இவ்வலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது பெயரினை முன்பதிவு செய்து இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். 

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். இந்த இலவச வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 

https://tamilnaducareerservices.tn.gov.in/


No comments

Thank you for your comments