Breaking News

2021-22ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வேலூர், மார்ச் 30-

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும்  நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அரசாணை அறிவிக்கப்பட்டு ரூ.2.08/- கோடி நிதியும் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  


இவ்விருது பெறுவதற்கான தகுதிகள் குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.  இவ்வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் சுய உதவிக் குழுக்கள், மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம். விருது பெறுவதற்கான விண்ணப்பித்தினை 08.04.2022ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  விண்ணப்பங்கள் மாதந்தோறும் கூட்டங்கள் நடத்துதல், குழுவின் சேமிப்பு தொகை முறையாக செலவிடப்படுதல், வங்கியில் கடன் பெறுதல், குழு உறுப்பினர்கள் பொருளாதார நடவடிக்கைகள் ஈடுபடுதல், திறன் வளர்ப்பு பயிற்சி, வாழ்வாதாரம் சார்ந்த பயிற்சி மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளில் மக்கள் அமைப்புகளை ஈடுபடுத்துதல், ஆகிய 6 காரணிகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து தகுதியான சமுதாய அமைப்புகளின் கருத்துருக்களுக்கான உரிய ஆவணங்களை குழு ஆய்வு செய்து மாவட்ட மற்றும் மாநில அளவில் விருதுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.

கூடுதல் விவரங்களுக்கு திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியரகம், வேலூர்-9.

No comments

Thank you for your comments