தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
ஈரோட்டில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டு ஈரோடு மண்டல அலுவலக பெயர் பலகை 01.03.2022 இன்று திறந்து வைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய சங்க தலைவர் கே கே பழனிச்சாமி, மத்திய சங்க பொருளாளர் ஆர். ரங்கநாதன், கிளை செயலாளர் துரைசாமி, செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் துணைப் பொதுச் செயலாளர் காஜா மைதீன் சிறப்புரையாற்றினார்.
No comments
Thank you for your comments