முதல்வர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழா... இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...
திமுக தலைவரும்,தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழாவை கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் கொண்டாடினர்.
இன்று மார்ச் 1 ஆம் தேதி திமுக கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கேக் வெட்டி ,உணவுகளை வழங்கி சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு திமுக சார்பில் வைகுண்டபுரம் தெரு பகுதியில் திமுகவின் கழக வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் வி.எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் 18-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன் கேக்கினை வெட்டி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினர்.
பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 18-வது வார்டு திமுக நிர்வாகிகள் வட்ட பிரதிநிதி மண்டி சம்பத், மாவட்ட தகவல் தொழில் அணி துணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அரவிந்த் குமார், மற்றும் நிர்வாகிகள் மண்டி வரதன், குமரன், மாவு ரமேஷ், அருள் ஷா, கணேஷ் ஷா, சாதிக், சரவணன், சுப்பிரமணியம் விஜயா, கீதா, ரோஜா உட்பட தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
No comments
Thank you for your comments