தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்தம் போராட்டம்
காஞ்சிபுரம்
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சார்பில் இன்று முதல் மூன்று நாட்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஆய்வாளர்கள், வட்ட துணை ஆய்வாளர்கள், குறுவட்ட அளவர்கள், நில அளவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நில அளவை அலுவலகம் முன்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் இன்று முதல் தொடர் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
களப்பணியாளர்களின் பணிசுமையை குறைத்து பணியை முறைபடுத்திட கோரியும், நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காளிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட கோரியும், உள்ளிட்ட16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
No comments
Thank you for your comments