மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுக்கான காசோலைகளை வழங்கினார் அமைச்சர் அன்பரசன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுக்கான காசோலைகளையும் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் இன்று(22.03.2022) நடைபெற்ற பொது நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் விழாவில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பொது நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுக்கான காசோலைகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கி, 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 2 நகர கூட்டுறவு வங்கிகள், 3 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 29 பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ஒரு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் என பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான பயிர் கடன்கள், விதை, உரங்கள், இடுபொருட்கள் விநியோகம் செய்வதுடன் குறுகிய கால மற்றும் மத்திய கால வேளாண் கடன்கள் வழங்கி உணவு உற்பத்திக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், கூட்டுறவு சங்கங்கள் கிராமங்கள் தோறும் தங்களது சேவையினை செய்து வருகின்றன.
மாண்புமிகு தமிழக அமைச்சர் அவர்களின் சட்டப்பேரவை விதி 110-இன் கீழான அறிவிப்பு - 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி :
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஒரு குடும்பத்திற்கு 40 கிராமுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்கள். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 93 கூட்டுறவு நிறுவனங்களில், நகைக்கடன் வழங்கி வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பொது நகைக்கடன் கள ஆய்வு செய்யப்பட்டு, 40 கிராமிற்குட்பட்டு அடமானம் வைக்கப்பட்ட பொது நகைக்கடன்கள் 18,443 பயனாளிகளுக்கு அசல் ரூ.58.08 கோடி மற்றும் வட்டி ரூ.5.62 கோடி அளவிற்கு தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டு இவ்விழாவில் நகைக்கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் தள்ளுபடி :
"கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையில் 31.03.2021 ல் நிலுவை நிற்கும் ரூ.2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுயஉதவிக்குழுக்களுக்கு கடன்கள் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு விரைவில் தள்ளுபடி வழங்கிட ஆவன செய்யப்படவுள்ளது.
பயிர்கடன் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில், கடனை உரிய காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனாக பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பு ஆண்டுக்கு ரூ.70.00 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது வரை 11.149 விவசாயிகளுக்கு ரூ.67.20 கோடி அளவிற்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டுறவு நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள், நடைபாதை வியாபாரிகள், ஆதரவற்ற விதவைகள், தொழிலாளர் நலவாரியத்தின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வரும் நபர்கள், Farm Crop Management System (FCMS) விவசாயிகள் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு கடன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.96 இலட்சமும், 8 நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.0.90 இலட்சமும், 6 ஆதரவற்ற விதவைகளுக்கு ரூ.2.05 இலட்சமும், தொழிலாளர் நலவாரியத்தின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு ரூ.0.30 இலட்சமும், (Farm Crop Management System (FCMS)) என்ற திட்டத்தின் மூலம் 1,652 விவசாயிகளுக்கு ரூ.851.00 இலட்சமும் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பண்ணை சாரா கடன்கள், வீட்டு அடமானக் கடன், தொழில் முனைவோர் கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், தாட்கோ கடன், டாப்செட்கோ கடன், டாம்கோ கடன் போன்ற பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டும், மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்காக கூட்டுறவு கணினி மயமாக்கப்பட்டு, விரைந்த சேவையினை அளித்து வருகின்றன என மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.சுந்தர்(உத்திரமேரூர்), திரு.சி.வி.எம்.பி.எழிலரசன்(கா
No comments
Thank you for your comments