7 நாட்கள் கிராம மக்களின் நலனுக்காக சிறப்பு முகாம்கள்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்தும் ஏழு நாட்கள் சிறப்பு முகாம் காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்தும் ஏழு நாட்கள் சிறப்பு முகாம் தொடக்க விழா ஏனாத்தூர் உயர்நிலை பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் பென்னேரிகரையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர்கள் செஞ்சிலுவை சங்கம் இணைந்து ஏனாத்தூர் பகுதியில் 23ஆம் தேதி இன்று முதல் 29ஆம் தேதி வரை ஏழு நாட்கள் கிராம மக்களின் நலனுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
இம்முகாமில் கண் மருத்துவம், பல் மருத்துவ பரிசோதனை, கால்நடை பராமரிப்பு மருத்துவ சோதனை, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு, கிராம பெண்களுக்கு கைவினைப் பொருட்களை பயிற்சி அளித்து ஊக்கப்படுத்துதல், பெண்களுக்கான பாலியல் விழிப்புணர்வு, யோகா போன்ற பல்வேறு பொதுப்பணிகளை சார்ந்த முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
இம்முகாமின் துவக்க விழா இன்று ஏனாத்தூர் அரசினர் உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக செஞ்சிலுவை சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மருத்துவர் ஜூவானந்தம் குத்துவிளக்கெற்றி துவக்கி வைத்தார்.
அதன் பின்னர் மாணவ, மாணவிகளிடையே பேசிய அவர் மாணவ செல்வங்களாகிய உங்களுக்குள் சமூக அற்பணிப்பை விதைக்கும் வகையிலேயே இத்தகைய சங்கங்கள் பள்ளி, கல்லூரிகளில் செயல்படுத்தபடுவதாக தெரிவித்த அவர் நாம் சமூக அற்பணிப்போடு செயல்பட்டு பணியை மேற்கொள்ளும் மாணவ செல்வாங்களாகிய உங்களின் சேவை நம் நாட்டிற்கு தேவை என பேசினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இம்முகாமில் காஞ்சிபுரம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியின் முதல்வர் கவிதா, ஊராட்சி மன்ற தலைவர் தர்மன், ஏனாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏழுமலை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விஜயகுமார், செஞ்சிலுவை சங்க அலுவலர் ஷியாம்சங்கர், ஆசிரியர்கள் இந்திரப்பிரியா, மகாலட்சுமி விழாவில் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments