பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மரியாதை
சேலம், மார்ச் 8-
பேராசிரியர் அன்பழகன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பாக அன்பழகன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சேலம் மததிய மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, சேலம் மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments