Breaking News

மார்க்சிஸ்ட் புகார் எதிரொலி உதவி கமிஷனர் அதிரடி மாற்றம்...

கோவை :

கோவை சாய்பாபா காலனி போலீஸ் உதவி கமிஷனர் சுகுமார் சிறப்பு அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

கோவையில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நடந்தபோது சிவானந்தா காலனியில் மக்கள் ஒற்றுமை மேடை என்ற அமைப்பு சார்பில் மகாத்மா காந்தி நினைவு நாள் அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பில் இடம்பெற்றுள்ள வெவ்வேறு கட்சியினர் அமைப்பினர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. 

உறுதிமொழியை ராமகிருஷ்ணன் வாசித்துக்கொண்டிருந்த போது அதிலிருந்த சில வாசகங்களை ஆட்சேபித்து   போலீசார் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் சார்பில் தமிழக அரசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக சாய்பாபா காலனி போலீஸ் உதவி கமிஷனர் சுகுமார் எஸ்.டி.எஃப். படைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

அவருக்கு பதிலாக தேனி மாவட்டத்தில் பணியாற்றிய சையத் பாபு புதிய உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் முடிவுக்கு வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments