Breaking News

முதல் பெண் மேயரான மகாலட்சுமி யுவராஜ்-க்கு ஊராட்சி குழுவின் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்...

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பொறுப்பேற்றுள்ள மகாலட்சுமி யுவராஜ் அவர்களுக்கு காஞ்சிபுரத்திலுள்ள மாநகராட்சி அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுவின் சார்பில் அதன் தலைவர் படப்பை ஆ. மனோகரன், துணைத் தலைவர் நித்யா சுகுமார் ஆகியோர் நேரில் பூங்கொத்து கொடுத்து பட்டாடை வழங்கி வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். 

உடன் மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், அம்மன் பில்டர்ஸ் உரிமையாளர்கள் தாஸ், டில்லிபாபு, விசிக மாவட்ட தலைவர் பாசறை செல்வராஜ், காஞ்சி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் தாமல் ராஜா ஆகியோர் உடனிருந்து வாழ்த்து தெரிவித்தனர்.






No comments

Thank you for your comments