Breaking News

பேராசிரியர் அன்பழகனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு...

காஞ்சிபுரம்:

திமுக முன்னாள் பொது செயலாளர் அன்பழகன் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி திமுகவினரால் செலுத்தப்பட்டது.

சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள திமுக அலுவலகமும் கலைஞர் பவள விழா மாளிகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக முன்னாள் பொது செயலாளரும்-, முன்னாள் அமைச்சரும்மான பேராசிரியர் அன்பழகனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்க்கு தெற்கு மாவட்ட செயலாளர்- உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மலர்தூவி மரியாதை செலுத்தானார். 

அப்போது காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், டி.குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துசெல்வம், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், மாநகர மன்ற உறுப்பினர்கள்  சந்துரு, விசுவநாதன், கமலக்கண்ணன், தசரதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ், ஜெகன்நாதன், முரளி, சீனு, சிலம்புசெல்வன், உமேஷ் உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்து மரியாதை செலுத்தினர்.






No comments

Thank you for your comments