Breaking News

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கல்லூரியில் மகளிர் தினவிழா

கோவை, மார்ச் 9-

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மகளிர் மேம்பாட்டு மையத்தின் சார்பாக உலக மகளிர் தினவிழா 08.03.2022 அன்று கொண்டாடப்பெற்றது. 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் மாநில மற்றும் கோவை மாவட்ட செயலாளர் அ.ராதிகா, மாநில குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுதா, மாநில குழு உறுப்பினர் எஸ்.பி.ஐ ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வனஜா ஆகியோர் கலந்து கொண்டு பாலின பாகுபாட்டை உடைக்கவும், பாலின சமத்துவ உலகத்தை கற்பனை செய்து பாருங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். 

அவர் ஆற்றிய சிறப்புரையில், மகளிர் தினக் கொண்டாடத்திற்கான காரணங்கள், பாலியல் வன்கொடுமைகளைச் சட்ட ரிதியாக அணுகுமுறை பற்றிய விழிப்புணர்வு, பெண்களைப் பாதுகாக்க இருக்கும் சட்டங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு, பெண்களுக்கு அரசியலில் இருக்கும் வாய்ப்புகள் என பெண்களை ஊக்குவிக்கும் தன்னம்பிக் கை கலந்த உரைகளை வழங்கினர். 

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் போ.சுப்பிரமணி அவர்கள் தலைமையேற்று அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களைக் கூறினார். 


மேலும் இவ்விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது பேராசிரியர்களை  ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் நடைபெற்றன. இவ்விழாவினை கல்லூரியின் நூலகர் ஷோபியா மெர்லின் ஒருங்கிணைத்தார். பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments

Thank you for your comments