Breaking News

மாநகராட்சியில் பணிபுரியும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்

கோவை, மார்ச் 9-

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சியில் பணிபுரியும் 1500 பெண் தூய்மை பணியாளர்களுக்கு முதன் முறையாக முழு உடல் பரிசோதனை முகாமினை மேயர்கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சியில் பணிபுரியும் 1500 பெண் தூய்மை பணியாளர்களுக்கு முதன் முறையாக முழு உடல் பரிசோதனை முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (09.03.2022) துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா, துணை மேயர்  ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சியில் பணிபுரியும் 1500 பெண் தூய்மை பணியாளர்களுக்கு முதன் முறையாக முழு உடல் பரிசோதனை முகாமில் நாளொன்றுக்கு 30 நபர்கள் வீதம் 1500 நபர்களுக்கு அனைத்து இரத்த பரிசோதனை, கண், காது, மூக்கு, மார்பகப்புற்று நோய், இருதயம், வயிறு, கர்ப்பப்பை, சிறுநீரகம் போன்ற சிறப்பு பரிசோதனைகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் வருடங்களுக்கு ஒருமுறை சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். முன்னதாக 08.03.2022 அன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு கிருமிநாசினி, முகக்கவசம், நாப்கின், சோப்பு, நகவெட்டி  உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  83வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி.சுமா, மாநகர நகர்நல அலுவலர் மரு.சதீஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், உதவி இருப்பிட மருத்துவர் பொன்முடிச்செல்வன், மரு.சடகோபன், மரு.மதுவந்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.


No comments

Thank you for your comments