உலக நுகர்வோர் தினம் போட்டிகள் அறிவிப்பு... மாணவ, மாணவியர்கள் பங்கேற்க அழைப்பு
ஈரோடு, மார்ச் 9-
தமிழக அரசு நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆண்டுதோறும் உலக நுகர்வோர் தினத்தையொட்டி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் விதத்தில் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டும் பள்ளி / கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் விதத்தில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, போன்றவை திண்டல், வேளாளர் கல்லூரி கஸ்தூரிபா அரங்கில் நடத்தப்பட உள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்களின் செய்தி குறிப்பில்,
2022 ஆம் ஆண்டிற்கான உலக நுகர்வோர் தினம் 1) ஈரோடு, 2)கோயம்புத்தூர், 3)திருப்பூர், 4)கருர், 5)நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கி, மண்டல அளவில் ஈரோடு மாவட்டத்தில் கொண்டாடுவது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, ஆணையாளர் அவர்களிடமிருந்து விரிவான அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கை வரப்பெற்றது.
இதன்படி தமிழக அரசு நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆண்டுதோறும் உலக நுகர்வோர் தினத்தையொட்டி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் விதத்தில் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டும் பள்ளி / கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் விதத்தில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, போன்றவை திண்டல், வேளாளர் கல்லூரி கஸ்தூரிபா அரங்கில் நடத்தப்பட உள்ளது.
போட்டி - தலைப்பு
பேச்சுப்போட்டி :
1. சேவைத்துறையின் வளர்ச்சி,
2. தவறான விளம்பரங்களால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளுதல்,
3. உணவுப்பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் பேக்கிங் மற்றும் லேபிளிங் 2011
(தவறுகளைக் கண்டுபிடித்தல்).
கட்டுரைப்போட்டி :
1. புதியப் பொருட்கள் மற்றும் சேவைகள்,
2. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019,
3. சில்லறை வணிகத்துறையின் கட்டமைப்பை மேம்படுத்துதல்.
ஓவியப்போட்டி :
1. உணவுப்பொருள் வீணாவதை தடுத்தல் அல்லது தவிர்த்தல்,
2. உலகமயமாதல் மற்றும் தாரளமயமாதல்,
3.செலவழிப்பு மற்றும் வருமானத்தில் அதிகரிப்பு,
4.விரைவான தொழில்நுட்ப மாற்றம்,
5.விளம்பரத்தின் தன்மை மாறுதல்.
மேற்கண்ட தலைப்பில் தொடர்புடைய போட்டிகள் / தேர்வுகள் நடத்தி மண்டல அளவில் பரிசு வழங்க தகுதியான மாணவ / மாணவிகளின் பட்டியல்களை (முதல் பரிசு -2, இரண்டாம் பரிசு -2, மூன்றாம் பரிசு -2) 14.03.2022 ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.
மேற்கண்ட தலைப்பில் விழிப்புணர்வு குறித்த மேற்படி போட்டியில் பங்குகொண்ட மற்றும் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி / கல்லுரி மாணவ / மாணவிகளை கௌரவிக்கும் வகையில் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் எதிர்வரும் 15.03.2022 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments