Breaking News

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திர தேர்த்திருவிழா

 "கோவை மாவட்டம்  பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா,  கொடியேற்றத்துடன் துவங்குகியது."

கோவையில் உள்ள மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற கோவிலாக, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். 

இந்தாண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும், இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று  கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து மாலை, யாக சாலை பூஜை, மலர் பல்லாக்கு நடைபெற்றது.

9ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை பங்குனி உத்திரத் திருவிழா நடக்கிறது. இதில், கொடியேற்றத்தில் இருந்து ஒன்பது நாட்களும், காலையில், யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. 

பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வரும்,14ம் வீதி இரவு திருக்கல்யாணம், 15ம் தேதி, மாலை, 4:35 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, 17ம் தேதி இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது, 18ம் தேதி அதிகாலை நடராஜருக்கு மகா அபிஷேகம் காலை 7 மணிக்கு மேல் பங்குனி உத்திர தரிசனம் காட்சி திருவீதி உலா இரவு 8 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா நிறைவடைகிறது என இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன், உதவி ஆணையர் விமலா தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments