மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா...
கோவை மதுக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நகராட்சி ஆணையர் பிச்சைமணி தலைமையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் நூர்ஜஹான், துணை தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பெண்களின் மகத்துவத்தை போற்றும் வகையில் பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெற்றது. நகராட்சி தலைவர் நூர்ஜஹான் கூறுகையில் அதிகமான பெண் கவுன்சிலர்கள் நம் நகராட்சியில் தான் உள்ளோம் எனவே மதுக்கரை நகராட்சியை நாம் முன்மாதிரியான நகராட்சியாக மாற்றுவோம் என்று மகளிர் தினத்தில் உறுதிமொழி ஏற்றனர்.
இறுதியில் துணைத்தலைவர் ரமேஷ் குமார் நன்றியுரை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அனைத்து கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
👀👀👀👀
கோவை மாவட்டம் பெஸ்ட்வே மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோவை மாவட்ட உடற்பயிற்சி சங்கத்தலைவர் ஜிம் சுகுமாரன் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடன் கராத்தே மாஸ்டர் ஜெனிஷா உள்ளார்.
No comments
Thank you for your comments