'மகளிர் ஆற்றல்' விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை:
சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ம் தேதி அன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
பல்வேறு துறைகளில் மிக சிறப்பாக செயல்படும் பெண்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் ‘நாரி சக்தி புரஸ்கார்’ எனப்படும் ‘பெண் சக்தி’ விருது வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த விருதை சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்தாத் கோவிந்த் வழங்கினார்.
இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த தோடா எம்பிராய்டரி கைவினை கலைஞர்களான ஜெயமுத்து, தேஜம்மா ஆகியோருக்கு 2020-ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருதும், மனநல மருத்துவரும், ஆராய்ச்சியாளருமான டாக்டர் தாரா ரங்கசாமிக்கு 2021-ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருதும் வழங்கப்பட்டது.
இவர்களில் ஜெயமுத்து, தேஜம்மா ஆகியோர் நீலகிரியை சேர்ந்தவர்கள். இவர்கள் பள்ளி நாட்களில் இருந்து தோடா எம்பிராய்டரி கொண்ட சால்வைகள் மற்றும் ஆடைகளை உருவாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில், 2020ம் ஆண்டுக்கான ’மகளிர் ஆற்றல்’ விருதை பெற்றுள்ள நீலகிரி கைவினைக்கலைஞர் ஜெயா முத்து, கைப்பின்னல் கலைஞர் தேஜம்மா ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-
சர்வதேச மகளிர் தினம் 2022-இல், 2020-ஆம் ஆண்டுக்கான "மகளிர் ஆற்றல்" விருதினைப் பெற்றுள்ள நீலகிரியைச் சேர்ந்த கைவினைக்கலைஞர் ஜெயா முத்து மற்றும் கைப்பின்னல் கலைஞர் தேஜம்மா, 2021-ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்ற மனநல மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான தாரா ரங்கசாமி ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
#IWD2022-இல் 2020-ஆம் ஆண்டுக்கான "மகளிர் ஆற்றல்" விருதினைப் பெற்றுள்ள நீலகிரியைச் சேர்ந்த கைவினைக்கலைஞர் ஜெயா முத்து மற்றும் கைப்பின்னல் கலைஞர் தேஜம்மா, 2021-ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்ற மனநல மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான தாரா ரங்கசாமி ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்! pic.twitter.com/smJExhiqSo
— M.K.Stalin (@mkstalin) March 9, 2022
No comments
Thank you for your comments